Categories
சென்னை மாவட்ட செய்திகள்

6 வயது சிறுவன் தண்ணீர்த் தொட்டியில் விழுந்து பரிதாப பலி..!!

பல்லாவரம் அருகே 6 வயது சிறுவன் மூடப்படாமலிருந்த தண்ணீர்த் தொட்டியில் விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள நெமிலிச்சேரி ரங்கநாதன் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் 4ஆவது மகன் சந்தோஷ் குமார்.. இந்த சிறுவனுக்கு 6 வயதாகிறது.. இச்சிறுவன் நேற்று தன்னுடைய அண்ணன் மற்றும் அக்காவுடன் வீட்டின் அருகே புதிதாக கட்டிவரும் கட்டடத்தில் மூடப்படாமலிருந்த 12 அடி தண்ணீர் தொட்டியின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது, திடீரென சிறுவன் எதிர்பாராதவிதமாக அந்தத் தொட்டியில் விழுந்துவிட்டான். இதனைக் கண்ட அவனது அக்காவும், அண்ணனும் தங்கள் பெற்றோரிடம் போய் கூறியுள்ளனர். இதையடுத்து

தகவலறிந்து உடனடியாக அக்கம்பக்கத்தினரும் அங்கு வந்து, தொட்டிக்குள் குதித்து சிறுவனை மீட்டு பின் சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. ஆனால், சிறுவன் தண்ணீர் அதிகளவில் குடித்து மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளான். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவன் இறந்துவிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த சிட்லப்பாக்கம் போலீசார், சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.. மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. 6 வயது சிறுவன் தண்ணீர்த் தொட்டியில் விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |