Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவால் பாதித்த மருத்துவர் உட்பட 32 பேர் இன்று உயிரிழப்பு!

சென்னையில் கொரோனோவால் பாதித்த மருத்துவர் உட்பட 32 பேர் இன்று உயிரிழந்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த 76 வயது மருத்துவர் கடந்த 16ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளார்.

ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 7 பேர் பலியாகியுள்ளனர். ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 6 பேரும், கேஎம்சி மருத்துவமனையில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |