Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் வீடு வீடாக உடல்நிலையை ஆய்வு செய்வது தொடர்கிறது – மாநகராட்சி ஆணையர்!

சென்னையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று மக்கள் உடல்நிலை குறித்து ஆய்வு தொடர்கிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

காய்ச்சல் முகாமில் இதுவரை 38 ஆயிரம் பேர் ஆய்வு செய்து கொண்டனர். சென்னையில் 20 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். தூய்மை பணியாளர்களை அழைத்துச் செல்ல 95 பேருந்துகள் பயன்படுத்தப்படுகிறது என்றும் மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு காலையும் மாலையும் சத்துணவு வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

தூய்மை பணியாளர்கள் 3 மாதங்கள் கடந்த தற்போது வரை நலமுடன் பணியாற்றி வருகிறார்கள், தூய்மை பணியாளர்களுக்கு மாதத்தில் தொடர்ந்து 10 நாள் கபசுர குடிநீர், வைட்டமின் மற்றும் சிங்க் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. மேலும் தினமும் ஒரு மாஸ்க், வாரத்திற்கு ஒரு முறை கையுறை தொடர்ந்து வழங்கப்படுகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

Categories

Tech |