மதுரை மாவட்டத்தில் மேலும் 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் மதுரை வருகை தந்ததன் காரணமாக தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. இதுவரை மதுரையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1073ஆக உள்ளது. 423 சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில் சிகிச்சையில் உள்ளவர்கள் 641ஆக உள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மதுரையில் நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1,225ஆக உயர்ந்துள்ளது.
மேலும் மதுரையில் நேற்று மாலை முதல் தற்போது வரை கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 10 பேர் பலியாகியுள்ளனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கீழ் கொரோனா சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையில் தான் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது. இன்று மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.