Categories
மாநில செய்திகள்

விஸ்வரூபம் எடுத்த சாத்தான்குளம் சம்பவம்… “தமிழகம் முழுவதும் நாளை செல்போன் கடைகளும் அடைப்பு”..!!

தமிழகம் முழுவதும் நாளை செல்போன் கடைகள் அடைக்கப்படும் என செல்போன் கடை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் கடையடைப்பு செய்யப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை 4 மணி நேரம் மருந்துக்கடைகள் அடைக்கப்படும் என மருந்து வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.

சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் சிறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்து வணிகர் சங்கங்களும் நாளை கடையடைப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

Categories

Tech |