கோவையில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்று கோவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் நிறுவன கூட்டமைப்புகளுடன் நடத்திய ஆலோசனையில், அவர்களிடன் குறைகளை கேட்டறிந்தார். ஆலோசனை முடிவில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கூறியதாவது, ” அரசு எடுத்த நடவடிக்கையால் கோவையில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை 3 கட்டங்களாக பிரிக்கப்பட்டு நடைபெறுகிறது. கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை தடுக்க அதிகளவில் பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. கோவையில் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கோவையில் அரசு திட்டங்கள் அதிக அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தொழிற்துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும். கோவையில், அரசு அறிவித்த திட்டப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.அனைத்து துறைகளும் சிறப்பாக செய்லபடுகின்றன. அனைத்து வசதிகளையும் கொண்ட மாவட்டம், கோவை மாவட்டம் என புகழாரம் சூட்டினார்.