காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 96 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,471 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் காஞ்சிபுரத்தில் புதிதாக 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியிருந்தது.
இதன் காரணமாக மொத்த பாதிப்புகள் 1,375 ஆக அதிகரித்திருந்தது. மேலும், இதுவரை 647 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 807 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 17 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
அதேபோல திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மேலும் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,422 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் திருவண்ணாமலையில் 54 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதன் காரணமாக மொத பாதிப்புகள் நேற்று 1,372 ஆக இருந்தது. மேலும் இதுவரை 546 பேர் குணமடைந்த நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 574 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர்.