Categories
மாநில செய்திகள்

1.58 லட்சம் தொழில்துறையினருக்கு ரூ.4,145 கோடி நிதியை பெற்றுள்ளோம்.. கோவையில் முதல்வர் பேட்டி!!

1.58 லட்சம் தொழில்துறையினருக்கு ரூ.4,145 கோடி நிதியுதவியை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இன்று கோவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் நிறுவன கூட்டமைப்புகளுடன் நடத்திய ஆலோசனையில், அவர்களிடன் குறைகளை கேட்டறிந்தார். அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர், சிறு, குறு, நடுத்தர தொழில்துறை புத்துயிர் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், குடிமராமத்து பணிகள் சிறப்பாக செயல்ப்பட்டு வருகிறது. அத்திக்கடவு அவிநாசி திட்டங்கள் விரைவாக நடைபெற்று வருகின்றன. அத்திக்கடவு அவிநாசி திட்டம் டிசம்பருக்குள் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார். மேலும், பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டம் உள்ளிட்ட திட்டங்களை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் 10 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

இதுவரை 36,905 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 292 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில், 112 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா குறித்து மக்களுக்கு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட நடவடிக்கையால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |