Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஜெ.அன்பழகன் ஏன் மரணம் ? ”எடப்பாடி சொன்ன காரணம்” ஷாக் ஆன திமுக…..!!

தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி கொரோனாவால் உயிரிழந்த ஜெ.அன்பழகன் மரணம் தொடர்பாக திமுகவை சாடினார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, ஸ்டாலின் கட்சியை சேர்ந்தவர்களை ”நீங்கள் போய் நிவாரணம் கொடுக்க வேண்டும்” என்று அறிவித்திருந்தார். அப்பொழுது நான் குறிப்பிட்டேன், மருத்துவ வல்லுனர்கள் கூறுவதை கேளுங்கள்… நீங்கள் தேவையில்லாமல் மக்களை சந்தித்தால்அங்கே நோய் பரவல் ஏற்பட்டுவிடும். ஆகவே நீங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடத்திலே நிவாரண பொருட்களை கொண்டு கொடுங்கள், அவர்கள் கொடுக்கட்டும்…. அப்போது நோய் தொற்று ஏற்படாது என்று தெரிவித்தேன்.

திமுக நிவாரணம்:

உடனடியாக அவரின் கட்சியினர் நீதிமன்றம் சென்று தீர்ப்பை வாங்கிக்கொண்டு அங்கொன்றும் , இங்கொன்றாக தான் நிவாரணம் வழங் கினார்கள். முழுமையாக நிவாரணம்  கொடுத்த மாதிரி தெரியல. விளம்பரம் தேடுவதற்காக  நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டார்கள். எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல், அரசு அறிவித்த வழிமுறைகளை பின்பற்றாமல் நிவாரணம் வழங்கினார்கள்.

ஒருவரை இழந்துவிட்டோம்:

ஒரு தன்னார்வலர்கள் காவல்துறை எல்லாம் நிவாரணம் கொடுத்தார்கள். இதனால் தொற்று ஏற்பட்டதா? இல்லையா ? அரசாங்கம் மருத்துவ நிபுணர்கள் சொல்கின்ற வழிமுறைகளை பின்பற்றுங்கள் என்று நான் சொன்னேன். அப்படி பின்பற்றமால் இருந்ததால் இன்று சுமார் 500 பேருக்கு மேல் நிவாரணம் கொடுத்தவர்கள் மூலமாக கொரோனா பரவியுள்ளது. அதுமட்டுமல்ல இவர்களுடைய ஆணையை ஏற்ற அவரின் கட்சியைச் சேர்ந்த ( திமுக ) ஒருவர்,  பொறுப்பில் இருக்கின்றார். நிவாரணம் கொடுத்தார். இன்று தொற்று ஏற்பட்டு ஒரு சட்டமன்ற உறுப்பினரை இழந்து விட்டோம்.

விழிப்புணர்வு:

நான் அறிவித்தபடி மருத்துவ நிபுணர்கள் குழு சொன்ன கருத்தை கேட்டிருந்தால், இன்றைக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினரை இழந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அறுவை சிகிச்சை செய்தவர்கள், இரத்தக்கொதிப்பு இருக்கின்றவர்கள், சக்கரை நோய் இருக்கின்றவர்கள், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள், இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கேன்சரால் பாதிக்கப்பட்ட வர்கள், தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இவர்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

கொலை செஞ்சவரு எடப்பாடி ...

உண்மைக்கு புறம்பானவை:

ஸ்டாலின் இதையெல்லாம் பொருட்படுத்தாமல், தக்க ஆலோசனை வழங்காமல் இப்படிப்பட்ட நிகழ்வுகளை பங்கு பெறலாம் என்று சொன்ன காரணத்தினாலே இன்றைக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினரை நாம் இழந்திருக்கின்றோம்.ஆகவே வேண்டுமென்றே திட்டமிட்டு தினம்தோறும் ஊடகத்தின் வாயிலாக பத்திரிகை வாயிலாக தொடர்ந்து உண்மைக்குப் புறம்பான பொய்யான செய்தியை எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டிருக்கிறார் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மரணம் குறித்து தமிழக முதல்வர் பேசியிருப்பது திமுகவினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

Categories

Tech |