Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: உடல்களை பெற்றனர் உறவினர்கள் …!!

மரணமடைந்த தந்தை – மகன் உடல்களை உறவினர்களை பெற்றுக் கொண்டனர்.

சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ்,  அவரது மகன் பென்னிக்ஸ் மரணமடைந்த சம்பவத்தில் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உறவினர்கள், வணிகர் சங்கங்கள் வேண்டுகோள் வைத்திருந்தனர். மேலும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து உடல்களை வாங்கமாட்டோம் என்றும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் 

உயிரிழந்த ஜெயராஜ் மகள் சொல்லும் போது, இந்த வழக்கை  உயர்நீதிமன்றம் கையில் எடுத்துள்ளது. வழக்கில் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்றால் அது காவல்துறையை கையில் இல்லை. மாஜிஸ்திரேட் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெண்ணின் உடலில் ஏற்பட்ட காயங்கள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றும், அடித்துக் கொலை செய்யப்படுவதற்கான சாட்சியங்களாக இருக்கின்றது என்றும் மாஜிஸ்ட்ரேட் உறுதி செய்திருக்கிறார்.

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க ஏதுவாக அனைத்து ஆதாரங்களும் இருப்பதால் நீதிமன்றம் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது எனவே நாங்கள் உடலை வாங்கிக்கொள்கின்றோம் என்று 3 மகள்களும், ஜெயராஜ் மனைவியும் தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |