Categories
மாநில செய்திகள்

சென்னைக்கு கச்சா எண்ணெய் கொண்டு வந்த சரக்கு ரயில் வெடித்து விபத்து!

ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த சரக்கு ரயில் தடம்புரண்டதில் 6 பெட்டிகள் வெடித்து தீ பற்றி எரிந்தது.

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு 56 டேங்கர்களில் கச்சா எண்ணெய் கொண்டுவந்த  சரக்கு ரயில்  இன்று அதிகாலை ஓங்கோல் பகுதியில் வந்தபோது தண்டவாளத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக தடம்புரண்டது. இதில் 6 பெட்டிகள் கவிழ்ந்ததில் கச்சா எண்ணெய் கீழே சிந்தியது.

இதன் காரணமாகதீ  பிடித்தடேங்கர்கள் எரியத் தொடங்கின. இது  குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராடி  தீயை அணைத்தனர். பின்னர் பழுதான தண்டவாளத்தை ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Categories

Tech |