Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம்… 85% வழங்கியாச்சி… அமைச்சர் காமராஜ்..!!

முழுஊரடங்கு அமலில் உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இதுவரை 85% அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூன் மாதம் விலையில்லா ரேஷன் பொருட்கள் 88% ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் போதுமான அளவிற்கு வெண்டிலெட்டர்கள், மருத்துவ உபகரணங்கள் கையிருப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் துவங்கும் என தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 19ம் தேதி முதல் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட 4 மாவட்டங்களில் (சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு,காஞ்சிபுரம்) முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் இந்த 4 மாவட்டங்களிலும் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ருந்தன. மேலும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருபவர்கள் வாகனங்களில் வரக்கூடாது. ஓட்டல்களில் அமர்ந்து உணவருந்த தடை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை இந்த 4 மாவட்டத்திற்க்கு தமிழக அரசு விதித்தது.

மேலும், முழு ஊரடங்கு அமலில் உள்ள 4 மாவட்டங்களில் ரூ.1,000 நிவாரணம் வீடு வீடாக சென்று கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பல்வேறு பகுதிகளில் ரூ.1,000 நிவாரணம் வீடு வீடாக சென்று அங்கன்வாடி ஊழியர்கள் கொடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் காமராஜ், 85% ரேஷன் அட்டைதாரருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்பு முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மதுரை மாவட்டத்திலும் ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |