பிரேசில் நாட்டில் முதல் முறையாக கடந்த வாரம் வாட்ஸ்அப் நிறுவனத்தின் பணம் அனுப்பும் வசதியை கொண்ட வாட்சாப் பே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அந்நாட்டில் போட்டி சூழலை பாதுகாக்கும் பொருட்டு ஒரே வாரத்தில் ‘வாட்சாப் பே’ சேவையை உடனடியாக நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட வணிக வங்கிகளுக்கு பிரேசிலின் மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் கவனம் பிரேசிலை விட்டு தற்போது இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது. ஆகவே விரைவில் இந்தியாவில் வாட்ஸ்அப் உபயோகிக்கும் அனைவரும் அதன் மூலம் பணத்தை அனுப்பலாம் எனத் தெரிவித்துள்ளது.