சுரங்கத்தில் கிடைத்த ரத்தினக் கற்களால் 30 குழந்தைகளின் தந்தை அதிர்ஷ்டக்காரர் ஆகியுள்ளார்
தான்சானியாவை சேர்ந்த லைஸெர் என்பவருக்கு நான்கு மனைவிகள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். சிறிய அளவில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தார் லைஸெர். அப்போது சுரங்கத்திலிருந்து இரண்டு கற்கள் இவருக்கு கிடைத்துள்ளது. அந்த கற்கள் இவரை மில்லினைர் ஆக்கியுள்ளது. இவருக்கு கிடைத்த இரண்டு கற்களின் மொத்த எடை 30 கிலோ இருக்கலாம் எனவும் பச்சை, நீளம், சிவப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கும் இதுவே அதிக விலைமிக்க கற்கள் என அமைச்சகம் கூறியுள்ளது.இந்த கற்களை மண்யரா பகுதியில் நடந்த சந்தையில் விற்பனை செய்து 3.4 மில்லியன் டாலருக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் லைஸெர் தனது சமூகத்தினரை இந்த பணத்தை வைத்து உயர்த்த போவதாக அறிவித்துள்ளார். அதோடு தனது வீட்டின் அருகிலேயே பள்ளிக்கூடம் ஒன்றை கட்டி ஏழை மாணவர்களுக்கு கல்வி புகட்ட முடிவு செய்துள்ளார். தான் படிக்காவிட்டாலும் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுக்கும் நோக்கம் தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு எனது வாழ்க்கையில் எதுவும் மாறப்போவதில்லை எனக் கூறி 2000 பசு மாடுகளை வாங்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.