Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 3,509 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 71,000ஐ நெருங்குகிறது!

தமிழகத்தில் இன்று 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 3,000ஐ தாண்டியது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 70,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 70,977 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 3,358 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 151 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை – 1,834, மதுரை – 204, செங்கல்பட்டு – 191,வேலூர் – 172, திருவள்ளூர் – 170, ராமநாதபுரம் – 140, காஞ்சிபுரம் – 98,கன்னியாகுமரி – 53, கரூர் – 3, நாகப்பட்டினம் – 10, நாமக்கல் – 1, நீலகிரி – 2, பெரம்பலூர் – 8, புதுக்கோட்டை – 1, கோவை – 29, அரியலூர் – 10, கடலூர் – 21,தருமபுரி – 1, திண்டுக்கல் – 15, ஈரோடு – 5, கள்ளக்குறிச்சி – 25, ராணிப்பேட்டை – 20, சேலம் – 89, சிவகங்கை – 25, தென்காசி – 12, தஞ்சை – 22,
தேனி – 72, திருப்பத்தூர் – 18, திருவண்ணாமலை – 55, திருவாரூர் – 5, தூத்துக்குடி – 24, நெல்லை – 11, திருச்சி – 27, திருப்பூர் – 7, விருதுநகர் – 48, விழுப்புரம் – 40 பேரும் புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது 30,064 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று மட்டும் 32,543 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தம் 10,08,974 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |