சென்னையில் இன்று புதிதாக 1,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 47,650ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 3,000ஐ தாண்டியது. இன்று 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 70,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 70,977 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 3,358 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 151 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 47 அரசு மற்றும் 41 தனியார் மையங்கள் என மொத்தம் 88 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 30,064 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று மட்டும் 32,543 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தம் 10,08,974 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனோவால் பாதித்தவர்களில் 2,157 பேர் ஆண்கள், 1,352 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை 43,835 ஆண்கள், 27,122 பெண்கள், 20 திருநங்கைகள் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.