தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 911ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இறப்பு விகிதம் 1.283%ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இன்று 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சென்னையில் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 694ஆக உயர்ந்துள்ளது.
இன்று 2,236 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 39,999ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னை – 27,985, செங்கல்பட்டு – 2,355, திருவள்ளூர் – 1,874, காஞ்சிபுரம் – 679, திருவண்ணாமலை – 564 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 56.35% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 70,000ஐ தாண்டியுள்ளது.
தமிழகம் முழுவதும் 70,977 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 3,358 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 151 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 47 அரசு மற்றும் 41 தனியார் மையங்கள் என மொத்தம் 88 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 30,064 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 32,543 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனோவால் பாதித்தவர்களில் 2,157 பேர் ஆண்கள், 1,352 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 12 வயதுக்குட்பட்ட 3,481 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 13 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 59,073 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 8,423 பேருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தகவல் அளித்துள்ளனர்.