Categories
கிரிக்கெட் விளையாட்டு

எனக்கு கொரோனா இல்ல… முகமது ஹபீஸ் டுவிட்… குழம்பிப்போன சக வீரர்கள்..!!

பாகிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ் தாக்கு கொரோனா தொற்று இல்லை என ட்விட் செய்துள்ளார் 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வரும் 28ஆம் தேதி இங்கிலாந்து நடைபெற இருக்கும் 3 டெஸ்ட் மற்றும் 20 ஓவர் தொடரை விளையாடுவதற்காக புறப்படும் நிலையில் அணியில் இருக்கும் வீரர்களுக்கு கிளம்புமுன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் மேற்கொண்ட பரிசோதனையில் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ், முன்னணி பேட்ஸ்மேன் ஜமான் உட்பட பத்து வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என கிரிக்கெட் வாரியம் கூறியிருந்தது.

இந்நிலையில் தனது திருப்திக்காக ஆல்ரவுண்டர் முகமது மற்றும் அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். ஆனால் அங்கு தரப்பட்ட பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இல்லை வந்துள்ளது. இதுகுறித்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் மறு பரிசோதனை செய்த அறிக்கையை ஆதாரமாக வைத்து முகமது ஹபீஸ் வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக கிரிக்கெட் வாரியம் நடத்திய பரிசோதனை சரியானதா என்ற குழப்பம் மற்ற வீரர்கள் மத்தியிலும் ஏற்பட, இன்று அனைத்து வீரர்களுக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகின்றது.

Categories

Tech |