Categories
மாநில செய்திகள்

இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் இன்று 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 70,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 70,977 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 3,358 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 151 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 36 மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் புதிதாக யாரும் கொரோனோவால் பாதிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.

புதிதாக கொரோனா பாதித்த மாவட்டங்கள் விவரம் :

சென்னை – 1,834,
மதுரை – 204,
செங்கல்பட்டு – 191,
வேலூர் – 172,
திருவள்ளூர் – 170,
ராமநாதபுரம் – 140,
காஞ்சிபுரம் – 98,
கன்னியாகுமரி – 53,
கரூர் – 3,
நாகப்பட்டினம் – 10,
நாமக்கல் – 1,
நீலகிரி – 2,
பெரம்பலூர் – 8,
புதுக்கோட்டை – 1,
கோவை – 29,
அரியலூர் – 10,
கடலூர் – 21,
தருமபுரி – 1,
திண்டுக்கல் – 15,
ஈரோடு – 5,
கள்ளக்குறிச்சி – 25,
ராணிப்பேட்டை – 20,
சேலம் – 89,
சிவகங்கை – 25,
தென்காசி – 12,
தஞ்சை – 22,
தேனி – 72,
திருப்பத்தூர் – 18,
திருவண்ணாமலை – 55,
திருவாரூர் – 5,
தூத்துக்குடி – 24,
நெல்லை – 11,
திருச்சி – 27,
திருப்பூர் – 7,
விருதுநகர் – 48,
விழுப்புரம் – 40 பேரும் புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |