இந்திய பெண்கள் பிரிட்டனில் கொடுக்கும் உயரிய விருதை பெற தேர்வாகி பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகின்றனர்
பிரிட்டனில் 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த செயல்பாட்டிற்கான விருது பெறும் 50 பெண் இன்ஜினியர்களின் பெயர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் ஜீரோ கார்பன் திட்டத்தில் தங்களது பங்களிப்பை வழங்கிய 50 பேர் தேர்வு செய்ய பட்டுள்ளனர்.
வெளியான பட்டியலில் பிரிட்டனில் அணுசக்தி ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் அறிவியல் குல்ஹாம் அறிவியல் மையத்தின் இன்ஜினியரான சித்ரா சீனிவாசன், போக்குவரத்து பிரிவில் ரிது கார்க், காலநிலை மாற்ற நிபுணர் அனுஷா ஷா, நில அதிர்வு துறையில் பர்னாலி கோஷ் மற்றும் மூத்த இன்ஜினியர் குசும் திரிகா ஆகிய 5 இந்திய பெண்கள் இடம்பிடித்துள்ளனர். இது பற்றி சித்ரா சீனிவாசன் கூறுகையில் “இந்த சாதனை அதிக ஊக்கத்தை கொடுக்கின்றது. எனது சகாக்களின் ஆதரவு இல்லை என்றால் நிச்சயம் இது சாத்தியமில்லை” என கூறியுள்ளார்.