மேஷ ராசி அன்பர்களே …! இன்று உங்கள் மனதில் இனம்புரியாத சந்தர்ப்பம் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனையின் நல்வழியில் செயல்பட ஊக்கத்தைக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவது நல்லது. பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்புடன் பின்பற்ற வேண்டும். உணவுப் பொருட்களை தரம் அறிந்து தயவு செய்து எடுத்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும்.
சகோதரர்களால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. பேசும் பொழுது கவனமாக பேசுங்கள் வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்கப்பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் அவரது நட்பும் கிடைக்கப்பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.இயந்திரங்களை பயன்படுத்தும் பொழுது ரொம்ப கவனமாக இயக்குங்கள். இன்று காதலர்களுக்கு ஓரளவு இனிமை காணும் நாளாக இருக்கும்.
நல்ல முன்னேற்றமான சூழ்நிலை அமையும். திருமணத்திற்கு முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள் அனைத்து விஷயங்களும் சிறப்பாகவே நடக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. என்றும் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.