Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆகஸ்ட் மாதம் விடுதலையாகிறார் சசிகலா ? மாறப்போகும் தமிழக அரசியல் …!!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா விடுதலை ஆகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலாவின் சிறை தண்டனை காலம் முடிவுக்கு வர இருப்பதால் ஏற்கனவே அவர் நீதிபதி குன்ஹா தீர்ப்பு படி விசாரணை நீதிமன்றத்தின் முடிவு காரணமாக சிறையில் இருந்தார். அதன் பிறகுதான் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, பின்னர் அவருக்கு பிணை கிடைத்து வெளியே வந்திருந்தார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு படி தற்போது அவர் சிறையில் இருக்கும் போது ஏற்கனவே அவர் விசாரணை நீதிமன்றத்தில் தீர்ப்பு காரணமாக எத்தனை நாட்கள் சிறையில் இருந்தாரோ அந்த காலம் அதிலிருந்து குறைக்கப்படும் அதேபோலவே நன்னடத்தை போன்ற காரணங்களால் சிறைத்தண்டனை ஒரு சில நாட்கள் குறைக்கப்பட்டுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

இதை எல்லாம் வைத்து பார்த்துதான் ஆகஸ்ட் 15 தேதிக்கு முன்னதாக அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என்ற ஒரு தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஆசிர்வாதம் ஆச்சாரி தனது ட்விட்டர் பதிவில், ஆகஸ்ட் 14ம் தேதி என்று சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று சொல்லி இருக்கின்றார். முன்னதாக சிறைத்தண்டனை முடிவடைந்து சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என்று தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தெளிவாக விடுதலை தேதியை தெரிவிக்க முடியாது என பெங்களூர் சிறை அதிகாரிகள் அறிவித்திருந்தார்கள்.

ஆகவே அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் தற்போது இப்படி ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதிமுக அரசியலை பொறுத்தவரைக்கும், தமிழக அரசியலைப் பொறுத்தவரைக்கும் சசிகலா விடுதலை பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகின்றது. இதனால் சசிகலா விடுதலை தேதி எப்போது முடிவு செய்யப்படும் ? சிறை அதிகாரிகள் எப்போது அறிவிப்பார்கள் ? என்பதெல்லாம் மிகவும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |