துலாம் ராசி அன்பர்களே…! இன்று மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் தயவுசெய்து பேச வேண்டாம். மன அமைதியை பாதுகாப்பதால் செயல்கள் அனைத்தும் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் உருவாகிற குளறுபடியை சரி செய்வீர்கள். அளவான பணவரவு இருக்கும். உறவினர் வகையில் அதிக பணம் செலவாகும். தூக்கமின்மை ஏற்படும். மனதில் தேவையில்லாத கற்பனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம். சுத்தமான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெற்று ஓரளவு படிப்படியாகவே உங்கள் மனமும் சந்தோஷமாகவே காணப்படும். வேலைப்பளு குறைந்து காணப்படுவீர்கள். வீட்டை விட்டு வெளியே தங்குவதற்கான சூழலும் இருக்கும். செலவு அதிகமாகும். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். இழுபறியான காரியங்களில் சாதகமான பலனையே கொடுக்கும். நீங்கள் எதிர்ப்பவர்களை சமாளிப்பீர்கள்.
எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். காதலர்களுக்கும் இனிமையான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ள மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.