சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 81 வயது மருத்துவர் உட்பட 24 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். பெரம்பூரை சேர்ந்த ஆண்(54), பேரவள்ளூரை சேர்ந்த ஆண்(48), வியாசர்பாடியை சேர்ந்த ஆண்(54), வில்லிவாக்கத்தை சேந்த ஆண்(54), சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
சென்னை கேஎம்சி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 4 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். ராயப்பேட்டையை சேர்ந்த முதியவர்(78), நெசப்பாக்கத்தை சேர்ந்த மருத்துவர்(81) கொரோனோவால் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஜபார்கான்பேட்டையை சேர்ந்த மூதாட்டி(77), வடபழனியை சேர்ந்த முதியவர் (63), தண்டையார்பேட்டையை சேர்ந்த முதியவர்(67) உள்ளிட்ட 7 பேர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். மேலும் ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.