தலைநகர் சென்னையில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான போலீசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை காவல்துறையில் அதிகாரிகள் முதல் ஆயுதப்படை போலீஸ் வரை கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி இதுவரை 976 பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதையடுத்து நேற்று மட்டும் 29 போலீசார் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.மேலும் இந்த புதிய பாதிப்பில் அதிகாரிகள் யாரும் பாதிக்கப்படவில்லை.இதில் 28 பேர் பூரண குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர்.இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து பணிக்குத் திரும்பிய வர்களின் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 1005 போலீசுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.