Categories
மாநில செய்திகள்

3,000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த தமிழக அரசு அனுமதி!

டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி ஒரு டாஸ்மாக் கடைக்கு 2 கேமராக்கள் என மொத்தம் 3,000 கடைகளில் 6000 கேமராக்கள் பொருத்த அனுமதி அளித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதுடன் மண்டலவாரியாக எந்தெந்த கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தலாம் என மண்டல வாரியாக அறிக்கை அளிக்க மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதிக விற்பனை நடக்கும் கடைகள், திருட்டு சம்பவங்கள் நடந்த கடைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ள கடைகளில் கேமராக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே திருட்டு நடைபெற்ற கடைகளில் குறிப்பாக கேமராக்கள் பொருத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் 545, கோவை 450, மதுரை 355 கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |