Categories
தேசிய செய்திகள்

1.25 கோடி பேருக்கு வேலை வழங்கும் “தற்சார்பு வேலை வாய்ப்புத் திட்டம்”… பிரதமர் தொடங்கி வைத்தார்!!

உத்தரப்பிரேதசத்தில் 1.25 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தற்சார்பு வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.

சுமார் 6 மாநிலங்களில் 116 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் வேலைவாய்ப்புத் திட்டத்தைப் பிரதமர் ஜூன் 20ம் தொடங்கி வைத்தார். வேலைவாய்ப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக உ.பி.யின் 31 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தால் உத்தரபிரதேச மாநிலத்தின் 31 மாவட்டங்களில் உள்ள ஊரக பகுதி மக்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயன்பெறுவர் என தெரிவித்துள்ளார்.

மத்திய, மாநில அரசின் பல்வேறு திட்டங்களில் 25 வகையான வேலை பிரிவுகளில் 1.25 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. கடந்த 18ம் தேதி செய்தியளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ” சொந்த ஊர் திரும்பிய புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க ரூ.50,000 கோடியில் வேலை வாய்ப்பு திட்டத்தை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்காக ஊர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களின் திறன்களை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்திருந்தார். விவசாயம், அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் புலம் பெயர் தொழிலாளர்களை உள்ளூர்களிலேயே பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக” அமைச்சர் கூறியிருந்தார். இந்த நிலையில் கடந்த 20ம் தேதி இத்திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர், இன்று முதற்கட்டமாக உத்தரபிரதேசத்தில் அதற்கான வேலை வாய்ப்பு பணிகள் வழங்கும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்.

Categories

Tech |