Categories
உலக செய்திகள்

ஒசாமா பின்லேடன் ஒரு தியாகி..! – பாக்., பாராளுமன்றத்தில் புகழாரம் சூட்டிய இம்ரான்!

சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை தியாகி என்றும், நம் நாட்டிடம் தெரிவிக்காமல் அமெரிக்கப் படைகள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அவரை கொன்றது அவமானம் என்றும் பாக்., பாராளுமன்றத்தில் இம்ரான் பேசியுள்ளார்.

பாகிஸ்தான் இன்னமும் பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்கி வருகிறது என அமெரிக்க வெளியுறவுத் துறை மதிப்பீடு அறிக்கை வெளியிட்டுள்ளது.  புதன் கிழமை அன்று  வெளியான அந்த அறிக்கையில் இந்தியா மற்றும் ஆப்கனை குறிவைத்து செயல்படும் பயங்கரவாத இயங்கங்களை பாகிஸ்தான் அரசு  ஒடுக்கவில்லை. மேலும் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாருக்கு பாகிஸ்தான் அரசு பாதுகாப்பு கொடுப்பதாக தெரிகிறது என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.

இது குறித்து பாராளுமன்றத்தில் பேசிய பாக்., பிரதமர் இம்ரான், . இந்த பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு ஆதரவளித்தோம். ஆனாலும் அவர்களிடம் இருந்து விமர்சனம் வருகிறது. அபோட்டாபாத்தில் நுழைந்த அமெரிக்கப் படைகள் பின்லேடனை கொன்றனர். அமெரிக்கப் படையினரின் பயங்கரவாத எதிர்ப்புப் போரில் 70,000 பாகிஸ்தானியர்கள் பலியாகியுள்ளனர்.

ஒசாமா ஒரு தியாகி ஆவார். பாகிஸ்தானிடம் கூட அறிவிக்காமல்  உள்ளே புகுந்து  கொன்றனர். இது பாகிஸ்தானுக்கு  பெரிய அவமானம்.  அச்சம்பவத்திற்கு பிறகும் உலக நாடுகள் அனைத்தும் நம்மையே தாக்கி பேச தொடங்கினர் என்று பேசினார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி கடும் கண்டனத்தை கிளப்பியுள்ளது. சர்வதேச பயங்கரவாதியாக ஒருவனை.. ஒரு நாட்டின் பிரதமரே தியாகி என புகழ்ந்து பேசலாமா என்று அந்நாட்டின் எதிர்க்கட்சிகளே கண்டிக்கின்றனர். அவரது இந்த சர்ச்சை பேச்சுக்கு இந்தியாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |