மதுரை மாவட்டத்தில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,454 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் இந்த மாவட்டத்தில் 204 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. நேற்று வரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,279 ஆக இருந்தது.
அதில், 448 பேர் குணமடைந்த நிலையில் 820 பேர் சிகிச்சை பெற்று வந்தனர் . இந்த நிலையில், இன்று 175 பேருக்கு கொரோனா இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 995 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை மதுரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒருவாரக் காலமாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக மதுரையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக 200க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு முதல் தற்போதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.