Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை… காதல் தோல்வியா?… போலீசார் விசாரணை..!!

இளம்பெண் தூக்குப்போட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்த சம்பவத்திற்கு, காதல் தோல்வி தான் காரணமா? என போலீசார் பெண்ணின் உறவினர் மற்றும் பொது மக்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலுப்பூரைச் சேர்ந்த அந்த 17 வயதுடைய இளம்பெண் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டு உத்திரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் கொடுக்காமல் உறவினர்கள் சிலர் இளம் பெண்ணின் உடலை எரித்து விட்டனர்.. இதுகுறித்து தகவலறிந்த அதேபகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் முரளிசங்கர், இலுப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரினைத் தொடர்ந்து, அந்தபெண்ணின் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆலங்குடியில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |