வேலூர் மாவட்டத்தில் மேலும் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக அங்கு கொரோனவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 897 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக வேலூர் மாவட்டத்தில் பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில் கடந்த இரு நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று மட்டும் வேலூரில் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனால், பாதிப்பு எண்ணிக்கை 750 ஆக இருந்தது. மேலும் நேற்று வரை 168 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மேலும், நேற்று வரை 579 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 726 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை வேலூரில் கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.