Categories
கிரிக்கெட் மாநில செய்திகள் விளையாட்டு

தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்… முதல் ஆளாக குரல் கொடுத்த பிரபல கிரிக்கெட் வீரர்..!!

சாத்தான்குளத்தில் சந்தேகமான முறையில் உயிரிழந்த தந்தை, மகன் ஆகியோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் குரல் கொடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.. இதனிடையே கடந்த 20ஆம் தேதி இரவு ஊரடங்கின்போது செல்போன் கடையைத் திறந்ததற்காக கூறி போலீசார் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் விசாரணை நடத்துவதற்காக  அழைத்துச் சென்றனர். அங்கு இருவரும் தாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது..

இந்நிலையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என குரல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து ஷிகர் தவான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”தமிழ்நாட்டின் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் பற்றி கேள்விப்பட்டு  அதிர்ச்சி அடைந்தேன்.. அவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டி நாம் அனைவரும் ஒன்றாக குரல் எழுப்ப வேண்டும் #JusticeForJeyarajAndFenix” என பதிவிட்டுள்ளார்.. இந்த சம்பவம் குறித்து குரல் கொடுத்த முதல் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |