மேஷ ராசி அன்பர்களே …! இன்று தியாக மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை இஷ்ட தெய்வ அருளால் நல்லபடியாகவே நடக்கும். குடும்பத்தின் முக்கிய தேவையை நிறைவேற்றுவிர்கள். அரசியல்வாதிகளுக்கு பதவிகள் கிடைக்க கூடிய அணுகுலம் உண்டு. பணவரவு சீராகவே இருக்கும்.
வாக்குவாதங்கள், அடுத்தவர் பற்றிய விமர்சனங்கள் போன்றவற்றை தவிர்ப்பதும் நல்லது. திடமான மனதுடன் உங்கள் பணிகளைச் செய்வது வெற்றியை கொடுக்கும். பேச்சின் இனிமை சாதனத்தின் மூலம் காரிய வெற்றியும் காண்பீர்கள். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும். எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக செல்லும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. கருநீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் கரும் நீல நிறம்.