விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று மனதில் அதிக உற்சாகமுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி எளிதாக நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும் நாள். வாங்க விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். குடும்ப செலவு கொஞ்சம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் இருந்து கொண்டே இருக்கும். மனதைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி கொஞ்சம் குறையும்.
எடுத்த காரியத்தை உடனே செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் இல்லத்திற்கு வந்து சேர்வார்கள். அதனால் செலவு கொஞ்சம் கூடும். மற்றவரிடம் உரையாடும் பொழுது ரொம்ப கவனம் வேண்டும். தேவையில்லாமல் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். பழைய பிரச்சினைகள் ஏதேனும் உங்கள் காதுக்கு வந்தால் தயவுசெய்து ஒதுங்கி இருங்கள். கணவன் மனைவி இருவரும் எதையும் பேசி எடுக்கக்கூடிய முடிவுகள் அனைத்து விஷயங்களும் நல்லதாகவே இருக்கும்.
புதிதாக இன்று காதலில் வயப்படக்கூடிய சூழலும் உண்டாகும். இன்று காதலர்களுக்கும் இனிமையான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.