Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…மனக்கவலை நீங்கும்…மதிப்பும்,மரியாதையும் கூடும்…!

கும்ப ராசி அன்பர்களே …!    மற்றவர் விஷயங்களில் நீங்கள் தயவுசெய்து தலையிடாமல் இருப்பது ரொம்ப நல்லது. உங்களுடைய அறிவு திறனை பார்த்து மற்றவர்கள் பொறாமைப்பட கூடும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் பொறுமையாக செயல்படுங்கள். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். வாக்குறுதிகளும் ஏதும் கொடுக்க வேண்டாம். நிதி மேலாண்மையில் கொஞ்சம் கவனமாக இருங்கள். மற்றவர்களுக்கும் தயவுசெய்து ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். சொந்த பணியில் அதிகம் அக்கறை கொள்ளுங்கள்.

கவனமாக காரியங்களை எதிர்கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் செழிக்க மாற்று உபாயம் உங்களுக்கு உதவும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். மனைவியின் கருத்து குடும்பத்தில் ஒற்றுமையை வளர்க்கும். சாமர்த்தியமான சில செயல்களால் நல்ல முன்னேற்றம் இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். மனக்கவலை நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும்போதும் கவனம் கொள்ளுங்கள். பொறுமையாகவே இன்று செயல்படுங்கள் நிதானம் இருந்தால் மட்டுமே இன்றைய நாளை நீங்கள் மிக சிறப்பாக செய்ய முடியும். மனம் உற்சாகமாக காணப்பட்டாலும் மாலை நேரங்களில் தேவையில்லாத குழப்பம் இருக்கும்.

தயவுசெய்து மாலை நேரங்களில் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள இசைப் பாடலை ரசித்து மகிழுங்கள். பயணத்தின் போது சில தடங்கல்கள் இருக்கும். திட்டமிட்ட காரியங்கள் செய்வது தான் இன்று மிகவும் சிறப்பு. காதலர்கள் கண்டிப்பாக இன்று பொறுமை காக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிற உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதம் காக்கைக்கு கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெறும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்.

Categories

Tech |