மீன ராசி அன்பர்களே…! இன்று சங்கடமான சூழ்நிலை கொஞ்சம் ஏற்படலாம். பொறுமையுடன் செயல்பட வைத்து எதிர்காலத்தில் நமக்கு நன்மையை பெற உதவும். தொழில் வியாபார நடைமுறை சீராக இருக்க கூடுதலாகவே பணிபுரிவீர்கள். செலவில் கண்டிப்பாக சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். தியானம் தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகிச்செல்லும்.
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். முதல் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். காதலர்கள் என்று கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும். நிதானமாக செயல்பட வேண்டும். கணவன் மனைவி இருவரும் எதையும் பேசி தீர்த்துக் கொள்வது ரொம்ப நல்லது. தேவையில்லாத விஷயத்திற்காக கோபப்பட வேண்டாம். நடைபயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.
உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ஓரளவு சீராக இருந்தாலும் மாலை நேரங்களில் இசைப் பாடலை ரசியுங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.