Categories
உலக செய்திகள்

பிள்ளைகளின் சைக்கிளை வச்சிக்கிட்டு சாப்பாடு கொடுப்பீங்களா?… நெஞ்சை உலுக்கும் தம்பதியரின் விளம்பரம்..!!

ஒரு குடும்பம் மகளின் மிதிவண்டியை விற்பனைக்கு வைத்து உணவு கிடைக்குமா என வெளியிட்ட இணைய விளம்பரம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது

சுவிஸர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தில் குடி இருக்கும் பிரேசில் நாட்டை சேர்ந்த குடும்பம் ஒன்று விளம்பரம் ஒன்றை வெளியிட்டு பலரது கவனத்தையும் தன்வசம் ஈர்த்துள்ளது. இணைய பக்கத்தில் அந்த குடும்பம் வெளியிட்ட விளம்பரத்தில் பிள்ளைகளின் மிதிவண்டி, மேசை உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு உணவு கொடுக்க முடியுமா என கேள்வி எழுப்பி உள்ளது அந்த குடும்பம். அவர்களது விளம்பரம் பலர் கவனத்தை ஈர்க்க உதவி செய்ய பலர் முன் வர தொடங்கியுள்ளனர்.

இதற்கு முன்னதாக இதே குடும்பம் தொலைக்காட்சி, மேசை உள்ளிட்ட பொருட்களை வைத்து உணவுக்காக காத்திருந்து உள்ளனர். அந்த குடும்பத்தில் தாய் தூய்மை பணியாளராக பணியாற்றி வரும் நிலையில் தற்போதைய சூழலில் வேலையில்லாமல் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கைவசம் குறைவாகவே பணம் இருப்பதாக கூறும் அத்தம்பதி சுவிஸ் மக்களின் தாராள குணத்தை மனதார பாராட்டி நன்றி கூறியுள்ளார்.

இதுவரை அந்த விளம்பரத்தின் மூலம் மூன்று பேர் உதவுவதற்கு முன் வந்ததாகவும், ஆனால் அவர்கள் எந்த பொருளையும் எதிர்பார்க்கவில்லை எனக் கூறியுள்ளனர் தம்பதியினர். அரசு வழங்கி வரும் உதவிகளை எதற்காக பெறவில்லை என கேள்வி எழுப்பினால் எங்கள் மகளுக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க வேண்டும். சமூக நலன்களை பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்ற நோக்கத்தில் நாங்கள் இங்கு வந்துள்ளோம் என கூறி உள்ளனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |