தமிழகத்தில் இரண்டாவது நாளாக ஒரே நாளில் 3,000 மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 74,622ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,523 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 122 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை – 1,956, மதுரை – 194, செங்கல்பட்டு – 232, வேலூர் – 149, திருவள்ளூர் – 177, ராமநாதபுரம் – 72, காஞ்சிபுரம் – 90, திருவண்ணாமலை – 70, கள்ளக்குறிச்சி – 58, ராணிப்பேட்டை – 53, கோவை – 43, தேனி – 40, தூத்துக்குடி – 37,விருதுநகர் – 33, திருச்சி – 32, கன்னியாகுமரி – 28, தஞ்சை – 25, நெல்லை – 19, திருவாரூர் – 18, விழுப்புரம் – 17, பேரும் புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது 32,305 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று மட்டும் 33,375 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தம் 10,42,649 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.