சிறுத்தை படத்தில் அறிமுகமான பேபி ரக்ஷனாவின் தற்போதைய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
கார்த்தி மற்றும் தமன்னா இணைந்து நடித்த திரைப்படம் சிறுத்தை. இதில் கார்த்தியின் மகள் கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி ரக்ஷனா. தனது 5 வயதில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த சிறுத்தை திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு அமலாபால், ஜெயம்ரவி, துல்கர் சல்மான், சரத்குமார், விஷால் போன்ற பல பிரபலங்களுடன் இவர் நடித்துள்ளார்.
சில நாட்களாக இவர் பற்றிய தகவல்கள் எதுவும் வெளிவராமல் இருந்த நிலையில், தற்போது அழகிப் போட்டியில் பங்கேற்ற இவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. கம்பீரமான தோற்றத்தில் மிகவும் அழகாக இருக்கும் ரக்ஷனா தமிழ்சினிமாவில் ஒரு ரவுண்ட் நிச்சயம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.