Categories
திருவள்ளூர் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் புதிதாக 136 பேருக்கும், தேனியில் 58 பேருகும் கொரோனா இன்று உறுதி..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக 136 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூரில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3,413 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் திருவள்ளூரில் 177 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,277 ஆக இருந்தது. நேற்றுவரை 1,923 பேர் குணமடைந்துள்ள நிலையில், சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1299ல் இருந்து 1,435 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 55 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல தேனியில் அரசு பேருந்து நடத்துனர்கள் 4 பேர் உட்பட புதிதாக 58 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 563 ஆக அதிகரித்துள்ளது. தேனியில் கடந்த 4 நாட்களாக கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றுமட்டும் தேனியில் 40 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 477 ஆக இருந்தது. இதுவரை 143 பேர் குணமடைந்த நிலையில், சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 332ல் இருந்து 390 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை கொரோனவால் 2 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |