தன்னை வேறு ஒருவருடன் சேர்த்துவைத்து பேசியதால் கணவனின் பிறப்புறுப்பில் மனைவி கொதிக்கும் பாலை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர்கள் பாண்டியன்-கவிதா தம்பதியினர் இத்தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளநிலையில் கவிதா கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையினால் அவரை பிரிந்து குழந்தைகளுடன் தாய் வீட்டில் வாழ்ந்து வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் இருந்த பாண்டியன் மனைவிக்கு போன் செய்து கூறியுள்ளார். அப்போது கவிதா தனது சகோதரியிடம் பணம் வாங்கி தருவதாக கூறி சொந்தமாக தொழில் செய்யுமாறும் கூறியுள்ளார். பாண்டியன் பணத்தை வாங்க கவிதாவின் சகோதரி சரசு வீட்டிற்கு செல்ல அவர் கவிதாவுடன் சேர்ந்து வாழுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கு பாண்டியன் உன் அக்கா வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார் என சொல்லிவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். இந்த விஷயம் கவிதாவிற்கு தெரியவர தன்னை வேறு ஒரு நபருடன் தொடர்பு படுத்தி பேசிய பாண்டியன் மீது கோபம் கொண்டு கணவன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சமயம் பாலை நன்றாகக் கொதிக்க வைத்து அவரது பிறப்பு உறுப்பில் ஊற்றிவிட்டார். இதனால் வலியால் துடித்த பாண்டியனை அக்கம் பக்கம் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க, காவல்துறையினர் கவிதா மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.