ஓம் நமோ நாராயணாய சொன்னால் கொரோனா ஒடிவிடும் என ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜர் தெரிவித்துள்ளார்.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி 99 லட்சத்து 12 ஆயிரத்து 223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 97 ஆயிரத்து 67 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 53 லட்சத்து 62 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலக வல்லரசு நாடான அமெரிக்காவே கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. அமெரிக்காவில் மட்டும் 25 லட்சத்து 52 ஆயிரத்து க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்து 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவிலும் கூட கொரோனாவின் தாக்கத்தால் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 15,000 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரா கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. அடுத்தபடியாக தலைநகர் டெல்லி, தமிழகம் என கொரோனா பிடியில் சிக்கியுள்ளன. இந்நிலையில் ஓம் நமோ நாராயணாய’ என்று 108 முறை சொன்னால் கொரோனா தானாக ஒடி விடும் , மருந்து தேவையில்லை என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜர் தெரிவித்துள்ளார்.