ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் எரகுட்லா மண்டலத்தில் ஆளில்லா ரயில்வே ட்ராக்கில் ஒன்று உள்ளது.
இந்த பகுதியில் கடப்பாவில் உள்ள தனியார் சிமெண்ட் தொழிற்சாலைக்கு ரயில் ஒன்று சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்தது. அப்போது அந்த பகுதியில் வைகோடூரை சேர்ந்த நாகி ரெட்டி மற்றும் அவரது நண்பர் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த கார் தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
ஆனால் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக தண்டவாளத்தில் சிக்கி நின்றுவிட்டது. இதனிடையே வேகமாக வந்த ரயில் கார் மீது மோதி இழுத்துச்சென்றுள்ளது. இந்த சம்பத்தில் நாகி ரெட்டி உயிரிழந்தார். அவரது நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆளில்லா ரயில்வே ட்ராக்குகளில் ஊழியர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எனவே வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளார்.