Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் இன்று மேலும் 226 பேருக்கு கொரோனா.. 5 பேர் உயிரிழப்பு..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 226 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இன்று பாதித்தவர்களில் 150 பேர் சென்னைக்கு சென்று வந்தது தெரியவந்துள்ளது. இந்த மாவட்டத்தில் மொத்தம் 10 மருத்துவமனைகள் உள்ளன. அங்கு ஏற்பட்டுள்ள புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 3 பட்டியலாக வெளியிடப்படுகிறது. அந்த வகையில் காலை 67 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 2வது பட்டியலில் 159 பேரும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 4,877 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த மாவட்டத்தில் பல்லாவரம், சோழிங்கநல்லூர், பரங்கிமலை ஆகிய இடங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டியுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2119-ல் இருந்து 2,345 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,463 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 9வது நாளாக முழுஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதில், 7 நகராட்சி மற்றும் 11 பேரூராட்சிகளிலும் 55 ஊராட்சிகள் உள்ளடங்கும். இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் நடமாடும் மருத்துவக்குழு மற்றும் சுகாதார அதிகாரிகள் 1,110 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் ரத்த பரிசோதனை அதிக அளவில் எடுக்கப்பட்டுவருகிறது. இதன் காரணமாக தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |