Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பாரத்நெட் : ”முதல்வர் பதிலளிக்க வேண்டும்” முக.ஸ்டாலின் அறிக்கை ..!!

பாரத் நெட் டெண்டர் ரத்து குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

கிராமங்களில் அதிவேக இணையதள வசதி ஏற்படுத்துவதற்கான பாரதம் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சுமார் 2,000 கோடி ரூபாயில் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இந்த டெண்டரை ரத்து செய்து மத்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில நபர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் 2000 கோடி ரூபாய் பாரத் நெட்  டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்று ஏற்கனவே அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற விசாரணையில் மத்திய அரசு நேற்றைய தினம் ரத்து செய்து உத்தரவிட்டு இருக்கிறது.

இது தொடர்பாக திமுக நீதிமன்றம் சென்ற போது  தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை முகாந்திரம் இல்லை என்று சொல்லியதால் இந்த வழக்கை முடித்து வைத்தார்கள். அப்போது நாங்க சொல்லி இருந்தோம், இன்றைக்கு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். தலைகுனிய வேண்டியவர்கள் மீண்டும் மீண்டும் பொய்யைச் சொல்லி மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றார்கள். இதற்க்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும் என்று கூறி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |