ஒன்றரை வயது குழந்தையை கூண்டில் அடைத்து வைத்து சுற்றிலும் மிருகங்களை வைத்திருந்த மூன்றுபேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்
அமெரிக்காவில் திறந்தவெளியில் அமைக்கப்பட்ட வீட்டின் அருகே ஒன்றரை வயது குழந்தை ஒன்று கூண்டில் அடைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மிருகம் போன்று கூண்டில் அடைக்கப்பட்ட அந்த ஒன்றரை வயது குழந்தையை மீட்டபின், அந்த வீட்டை சுற்றி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சுமார் 600 மிருகங்களை கண்டு பிடித்துள்ளனர். அதில் 56 நாய்கள், 3 பூனைகள், 86 கோழிகள், 8 பாம்புகள், 4 கிளிகள் மற்றும் 531 எலிகள் அடங்கும்.
அதோடு வீட்டை சோதனை செய்த பொது அங்கு வளர்க்கப்பட்டிருந்த 27 கஞ்சா செடிகளும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 துப்பாக்கிகளும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பிரவுன்,ஹெதர், சார்லஸ் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது விலங்குகளை கொடுமைப்படுத்துதல், குழந்தை துஷ்பிரயோகம், போதைப் பொருள் உற்பத்தி செய்தல் மற்றும் வைத்திருந்தல், ஆயுதம் வைத்திருத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.