ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் எம்.ஆர்.டி. நகரைச் சேர்ந்தவர் மீன்பிடித் தொழிலாளர் சந்திரன்.. 50 வயதுடைய இவருக்கு சதீஸ் (21) மற்றும் இருளேஸ்வரன் (20) என்ற 2 மகன்கள் உள்ளனர்.. இந்தநிலையில் நேற்று இரவு 2 மகன்களுக்கு இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது.
இதனை தாய் சாந்தி ஏன் இப்படி குடித்துவிட்டு சண்டை போடுகிறீர்கள் என்று தட்டிக் கேட்டுள்ளார். அப்போது மூத்த மகன் சதீஸ் தாயை அடிக்க முயன்றதாக சொல்லப்படுகிறது.. இதனை பார்த்து தடுக்காமலிருந்த தந்தையிடம் இருளேஸ்வரன் கேட்க இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கடும் ஆத்திரமடைந்த இருளேஸ்வரன், தந்தை சந்திரனை வீட்டுக்கு வெளியே இழுத்துச் சென்றார்.
அப்பகுதியிலுள்ள அங்காள ஈஸ்வரி கோயில் வாசல் முன்பு கீழே தள்ளிவிட்டு பின் தலையில் இரும்பு கம்பி மற்றும் உருட்டுக் கட்டையால் கொடூரத்தனமாக அடித்துக் கொலைசெய்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ராமேஸ்வரம் துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருளேஸ்வரனை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.