திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 127 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
அதில் 8 மாத குழந்தை, 39 பெண்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1625 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் திருவண்ணாமலையில் 70 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் மொத்தம் எண்ணிக்கை 1498 ஆக அதிகரித்திருந்தது.
மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 573 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று வரை 916 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது 1,043 ஆக அதிகரித்துள்ளது. திருவண்ணாமலையில் கொரோனாவிற்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.