Categories
பல்சுவை

22 நாட்களாக … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

கடந்த 22 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கவலைஅடைந்துள்ளனர் :

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன.

இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து ரூபாய் 83. 59 காசுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து 12 காசுகள் அதிகரித்து ரூபாய் 77.61 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |