Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா தடுப்புக்கு நிறைய ஆலோசனை தந்து உள்ளேன் – மு க ஸ்டாலின்

கொரோனா பேரழிவிற்கு முதல்வர்தான் காரணம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க தொடர்ந்து நிறைய ஆலோசனைகளை தந்துள்ளதாக ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். கொரோனாவை  தடுக்க அவர் என்ன ஆலோசனை தந்தார் என முதல்வர் கேட்டதற்கு, மு க ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். ஏராளமான மருத்துவர்கள் சொன்ன அறிவுரைகளை சொன்னேன். நான் சொன்ன ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முதல்வர் கேட்கவும் இல்லை, செய்யவும் இல்லை.

கொரோனா சமூக பரவல் இல்லை என வார்த்தை விளையாட்டாக மக்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார் முதல்வர். தமிழகத்தின் ஒட்டுமொத்த கொரோனா பேரழிவுக்கு காரணம் முதல்வர் தான் . இவர் என்ன சொல்றது,  நான் என்ன கேட்கிறது என முதல்வர் அலட்சியமாக இருந்தார் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

Categories

Tech |